செய்தி

ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்றையதினம் இதனை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அபுதாபி மற்றும் டுபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11 போட்டிகள் டுபாயிலும் நடைபெறவுள்ளன.

அத்துடன் குழு Aயில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், B குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.