செய்தி

இலங்கைக்கான புதிய USA தூதுவராக எரிக் மேரின்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த அனுபவமிக்க தூதுவராகத் திகழும் எரிக் மேயர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான அமெரிக்காவின் தூதுவராக எரிக் மேயரை பரிந்துரைத்து, அந்த நியமனத்திற்கான ஒப்புதலை பெறும் வகையில் செனட்டுக்கு பரிந்துரைத்துள்ளார்

மூத்த வெளிநாட்டு சேவையாளர் ஒருவர் என கருதப்படும் மேயர் தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள் பணியகத்தில் சிரேஸ்ட அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

usa flag

இந்த பதவியில் அவர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பை மேற்கொண்டு வருகிறார். 

எரிக் மேயர் கலிபோர்னியாவின் பகர்லீ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பட்டதாரி என்பதுடன் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டப் படிப்பினையும் பூர்த்தி செய்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.