செய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இதன்படி வெள்ளை அரிசி மற்றும் நாட்டரிசி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது ,எதிர்காலத்தில் விலை குறைப்பினை மக்கள் அனுபவிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.