எதிர்வரும் ஜூலை மாதத்தில் உலகை மிகப் பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில் அதே வேளை, துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன் கணித்து வழங்கி வருகிறார்.அவை நிறைவேறியும் இருக்கின்றன.
இதற்கு முன்பும் பாபா வங்கா கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது கணிப்புக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான இவர் தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். இவர் வரைந்தது போலவே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கவனத்தில் எடுத்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு இவரது ஓவியங்கள் ஒத்துப்போவதைக் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர் தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ஓவியம் வரைந்திருக்கிறார்.அதாவது, ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பாதிக்கப்படுவதை ஓவியமாக வரைந்துள்ளார்.

