சோதிடம்

அளவு கடந்த அன்பை கொடுக்கும் உன்னதமான 3 ராசிகள்…

  • February 6, 2026
  • 0 Comments

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அன்பானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் துரோகம் செய்தவர்களை கூட எளிதில் மன்னித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி 12 ராசிகளில் நிபந்தனையற்ற வகையில், பதிலுக்கு எந்த எதிர்ப்பார்ப்புகளும் இன்றி அன்பு காட்டுவதில் பெயர் பெற்ற […]

செய்தி

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள் வெளியேற வேண்டும்

  • February 5, 2026
  • 0 Comments

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார். அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது. எனினும் […]

சினிமா

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

  • February 5, 2026
  • 0 Comments

வெள்ளித் திரைக்கு நிகராக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றுள்ளது சின்னத்திரை. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, சிறகடிக்க ஆசை, கயல், அய்யனார் துணை என சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘மூன்று முடிச்சு’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் வாங்க […]

செய்தி

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

  • February 3, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகள் மீதான அவுஸ்திரேலிய தடையின் கீழ், 100,000க்கும் மேற்பட்ட Snapchat சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூக ஊடகத் தடையின் கீழ் 415,000 Snapchat சமூக ஊடகக் கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் புதிய சட்டங்களை இயற்றியது.ஸ்னாப்சாட், மெட்டா, டிக்டாக் மற்றும் […]

விளையாட்டு

2026 ரி20 உலக கோப்பைக்கான இலங்கை அணி

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தசுன் ஷனக்க தலைமையில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.இலங்கை அணி பிப்ரவரி எட்டாம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கும். அணி விவரம் தசுன் ஷானக (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, […]

சோதிடம்

எப்போதும் கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்….

  • January 30, 2026
  • 0 Comments

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால்,அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.ஆயினும் ஜோதிடத்தின் பிரகாரம், சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கவலையான விடயங்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்களாம். அப்படி வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு விடயத்துக்கு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்தப் பதிவில் பார்க்கலாம். கடகம் சுக்கிரகின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில்  அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் […]

செய்தி

வெளிநாடு செல்ல தயாரா? 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

  • January 28, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.  தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகப்படியான தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய 77,500 தொழில்வாய்ப்புடன் குவைத் முன்னணியில் உள்ளது.  அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 தொழிலாளர்களையும் கட்டாருக்கு 44,000 தொழிலாளர்களையும் சவூதி அரேபியாவுக்கு 31,000 தொழிலாளர்களையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.  இவை தவிர, மேலும் 17 நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு […]

தகவல்கள் தொழில்நுட்பம்

சைபர் தாக்குதலிலிருந்து தப்பிக்க புதிய வசதி – மெட்டாவின் அறிவிப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர் பாதுகாப்பு அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பயனர்கள் இந்த அம்சத்தை On செய்தவுடன், செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் வரும்.  முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படும். தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் […]

செய்தி

இந்தியாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்! கண்காணிப்பு பணிகள் தீவிரம்

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘நிபா’ (Nipah) வைரஸ் பாதிப்பு காரணமாக, அண்டை நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் விமான நிலையக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய ஐந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு தாதியரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 110 பேர் […]

செய்தி

மனநலப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

  • January 27, 2026
  • 0 Comments

தற்போது 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் மனநலப் பாதிப்புகளுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக தேசிய மனநல நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட்(Covid) காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி நடவடிக்கைகள் இணைய வழியில் (Online) நடைபெற்றன.இது சிறுவர்கள் கையில் கைத்தொலைபேசிகள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகுத்தது.கல்வியின் தேவைக்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது அடிமைத் தனமாக மாறியுள்ளது. இதனால் பல சிறுவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.கைத்தொலைபேசி மட்டுமன்றி, போதைப்பொருட்களுக்கு […]