செய்தி

இங்கிலாந்தில் Flat வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ⚠️

இங்கே flatகளை வைத்திருப்பவர்கள் எல்லோருமே குத்தகைக்குத்தான் இருக்கிறார்கள். அந்த நிலங்களின் உரிமை வேறு யாரிடமோ இருக்கிறது.
புத்தகையைப் புதுப்பிக்காது போனால் அந்த வீடு நிலச் சொந்தக்காரருக்கு உரித்தானதாக மாறிப்போகும்.

என் நண்பர் ஒருவரின் London Wembley யில் உள்ள Flat-க்கு lease இன்னும் 30 வருடங்கள்தான் மீதம் உள்ளது. Lease 80 வருடங்களு விடக் குறைவாக இருந்தால், flat owners அந்த freeholders க்கு அதிகமான பணங்கொடுத்து அதைப் புதுப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாத property களின் பெறுமானம் 50% க்கும் கூடுதலாகக் குறைய வாய்ப்புண்டு. அதற்குக் காரணம் marriage value என்கிற அநியாயமான சட்டமாகும்.

உதாரணமாக எனது நண்பரின் வீட்டின் இன்றைய சந்தை மதிப்பு £300,000-லிருந்து £100,000-க்கு கீழே குறைந்துவிட்டது.
வங்கிகள் அதற்கு mortgage தர மறுக்கின்றன. Lease-ஐ நீட்டிக்க அவரது Freeholderசுமார் £120,000 கட்டச் சொல்கிறார். அதில் £108,000 “Marriage Value” என்ற கட்டணம் மட்டுமே!

🔹 Marriage Value என்றால் என்ன?
Lease 80 வருடங்களுக்குக் கீழே குறைந்தவுடன், நீட்டிப்பால் Flat-இன் மதிப்பு எவ்வளவு உயருமோ, அதில் 50% தொகையை Freeholder-க்கு கொடுக்க வேண்டும். Lease குறையக் குறைய இந்தத் தொகை வேகமாக உயரும்.

உதாரணமாக, நண்பரது leaseயை நீட்டித்தால் அவரது property £300,000 வரை போகும்.
அப்படி என்றால் £200,000 பெறுமதி உயரும். அதில் பாதியான £100,000 யை நிலச் சொந்தக்கார்ரான freeholderக்குக் கொடுக்க வேண்டும்.

🔹 உங்களுக்கும் இதே நிலமை இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  1. இன்றே உங்கள் lease-இல் எத்தனை வருடங்கள் மீதம் உள்ளது என்று பாருங்கள் (Land Registry அல்லது உங்கள் solicitor மூலமாக அதைத் தெரிந்துகொள்ளலாம்).
  2. 90 வருடங்களுக்குக் கீழே இருந்தால், 80-ஐ அடைவதற்கு முன்பே நீட்டித்துவிடுங்கள். அப்போது Marriage Value கட்ட வேண்டியதில்லை.
  3. Freeholder-இன் “informal offer”-ஐ உடனே ஏற்காதீர்கள். சட்டப்படியான Section 42 Notice வழியில் 90 வருடங்கள் கூடுதலாகவும், ground rent இல்லாமலும் நீட்டிப்பு பெறலாம்.
  4. முதலில் ஒரு RICS surveyor மூலம் சரியான valuation யை எடுங்கள்.
  5. Flat வாங்கி 2 வருடம் காத்திருக்க வேண்டிய விதி இப்போது இல்லை. வாங்கிய நாளிலிருந்தே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

🔹 சட்டம் மாறப்போகிறதா?
2024 Leasehold Reform சட்டம் Marriage Value-ஐ ரத்து செய்யும் என்று சொல்கிறது. ஆனால் அந்தப் பகுதி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, எப்போது வரும் என்ற தேதியும் இல்லை. 2028 அல்லது அதற்குப் பிறகு ஆகலாம். அதுவரை காத்திருப்பது ஒரு சூதாட்டம், ஏனெனில் lease ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டே போகிறது.

👉 உங்கள் Flat-இன் lease எவ்வளவு உள்ளது என்று இன்றே பாருங்கள். தெரிந்தவர்களுக்கும் இதைப் பகிருங்கள்! 🙏

நண்பருக்கு எனக்குத் தெரிந்த சில ஆலோசனைகளை வழங்கினேன். அவரால் ஒரு பத்தாயிரம் வரை சேமிக்க முடியுமாக இருக்கும்.
இந்த நிலையில் இருந்து எப்படி மீள முடியும் என்கிற விடயங்களையும் விளங்கப்படுத்தினேன். நட்டமில்லாமல், அவரது கைக்காசைப் போடாமல் எப்படி மீள்வது என்பதுதான் பார்க்க வேண்டி இருந்தது.

நீங்களும் ஒரு flat வைத்திருந்தால் இந்த விடயங்களில் கவனமாக இருங்கள்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.