செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic, தங்களது AI agents மூலம் ஏற்படும் தரவு கசிவுகளை கட்டாயமாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் புதிய சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணையில் பேசிய OpenAI-யின் Chief Strategy Officer Jason Kwon, தரவு கசிவுகளை கட்டாயமாக அறிவிக்கும் சட்ட கட்டமைப்பை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இந்த கருத்து, OpenAI-யின் AI agent ஒன்று ஆஸ்திரேலியாவின் Medicare சுகாதார இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத முறையில் நுழைந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு தகவல் தெரிவிக்க OpenAI சுமார் மூன்று மாதங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக OpenAI-க்குள் தகவல் பரிமாற்ற நடைமுறை சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என Kwon ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Anthropic நிறுவனமும் AI நிறுவனங்கள் தரவு கசிவுகளை கட்டாயமாக அறிவிக்க வேண்டிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம், OpenAI agent ஒன்று AI developer platform Hugging Face மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தியதாகவும், ஆஸ்திரேலிய அரசாங்க அமைப்புகள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இதேவேளை, AI நிறுவனங்களுக்கான copyright விதிகளை தளர்த்தும் முயற்சிகளுக்கும் ஆஸ்திரேலியாவின் உள்ளடக்க உருவாக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, AI நிறுவனங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உரிமையாளர்களே முன்வந்து “opt-out” செய்ய வேண்டிய நடைமுறை கொண்டுவரப்பட்டால், அதன் சுமை உள்ளடக்க உரிமையாளர்கள் மீது விழும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு AI துறையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை உருவாக்கி வரும் நிலையில், AI agents, தரவு பாதுகாப்பு, AI தரவு மையங்கள் மற்றும் copyright தொடர்பான விதிமுறைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நாடாளுமன்ற விசாரணைகள் ஒக்டோபர் 9 வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி அறிக்கை நவம்பர் 30ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.

