தொழில்நுட்பம்

அதிகமான பாதுகாப்பு குழுக்களுக்கு சக்திவாய்ந்த AI மாடல்களை வழங்கும் Anthropic

சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பயன்படுத்துவதற்காக தனது சக்திவாய்ந்த AI மாடல்களுக்கு கூடுதல் அணுகலை Anthropic வழங்கியுள்ளது. புதிய விரிவாக்கப்பட்ட Cyber Verification Program (CVP) மூலம் தகுதி பெற்ற பாதுகாப்பு குழுக்கள் குறைந்த கட்டுப்பாடுகளுடன் Claude Opus 5.5, Claude Sonnet 5.5 மற்றும் Claude Mythos 5.1 உள்ளிட்ட மேம்பட்ட மாடல்களைப் பயன்படுத்த முடியும்.

இந்த திட்டம் முன்பு தனித்தனியாக செயல்பட்ட Project Glasswing மற்றும் Cyber Verification Program ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கிறது. Glasswing திட்டத்தின் மூலம் ஏப்ரல் முதல் ஜூலை வரை கூட்டாளி நிறுவனங்கள் குறைந்தது 129,000 சரிபார்க்கப்பட்ட மென்பொருள் பாதிப்புகளை கண்டறிந்ததாக Anthropic தெரிவித்துள்ளது. அவற்றில் 33,000-க்கும் மேற்பட்டவை அதிக அல்லது மிக அதிக தீவிரத்தன்மை கொண்டவையாக மதிப்பிடப்பட்டுள்ளன.

புதிய CVP மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. Defense Access மூலம் சம்பவங்களைக் கையாளுதல், malware analysis மற்றும் vulnerability கண்டறிதல் போன்ற பணிகளை பாதுகாப்பு குழுக்கள் மேற்கொள்ளலாம். Red Team Access மூலம் அங்கீகரிக்கப்பட்ட penetration testing மற்றும் red-team நடவடிக்கைகளுக்கு கூடுதல் அணுகல் வழங்கப்படுகிறது. Specialized Access மிகவும் குறைந்த கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் நிலையில், மின்சார வலைப்பின்னல்கள், விமான அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு இடையிலான பணப் பரிமாற்ற உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளைச் சோதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும்.

இத்தகைய சக்திவாய்ந்த AI திறன்கள் பாதுகாப்பு குறைபாடுகளை விரைவாக கண்டறிந்து சரிசெய்ய உதவினாலும், அதே திறன்கள் தீங்கிழைக்கும் நபர்களால் பயன்படுத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக Anthropic தெரிவித்துள்ளது. அதனால், ஒவ்வொரு அணுகல் நிலையத்திற்கும் தனித்தனி சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Anthropic-ன் இந்த நடவடிக்கை, AI தொழில்நுட்பத்தை சைபர் பாதுகாப்புக்காக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மேம்பட்ட கருவிகளை வழங்குவதுடன், AI மூலம் உருவாகும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

You may also like

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில்
தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115