செயற்கை நுண்ணறிவு (AI) என்றாலே அமெரிக்காவின் Silicon Valley, San Francisco போன்ற நகரங்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், உலகின் முக்கியமான AI மையங்களில் ஒன்றாக தற்போது கனடாவின் Toronto நகரமும் வேகமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக AI ஆராய்ச்சி, திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள் Toronto-வின் AI வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
Toronto-வின் AI வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று Nobel Prize பெற்ற கணினி விஞ்ஞானி Geoffrey Hinton-ன் ஆராய்ச்சியாகும். 1980களில் University of Toronto-வில் Hinton மேற்கொண்ட machine learning மற்றும் neural network தொடர்பான ஆராய்ச்சிகள், இன்றைய நவீன AI தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன. அவரைச் சுற்றி உருவான ஆராய்ச்சி சூழல், பின்னர் Toronto-வை AI நிறுவனங்கள் மற்றும் திறமையான நிபுணர்கள் கூடும் முக்கிய நகரமாக மாற்றியது.
இன்று Toronto-வில் Google, Nvidia, Meta மற்றும் Microsoft போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகங்கள் அல்லது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இதனுடன் பல AI startups-களும் நகரில் உருவாகி வருகின்றன. AI துறையில் Toronto-வின் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் நகரில் AI சார்ந்த முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
Toronto-வின் மற்றொரு முக்கிய பலம் அதன் திறமையான மனிதவளமாகும். University of Toronto போன்ற கல்வி நிறுவனங்களும் Vector Institute போன்ற AI ஆராய்ச்சி அமைப்புகளும் புதிய AI திறமைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. CBRE-ன் 2026 ஆய்வில் Toronto, வட அமெரிக்காவின் tech talent சந்தைகளில் San Francisco மற்றும் Seattle-க்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Toronto-வில் உருவான Cohere போன்ற AI நிறுவனங்களும் இந்த நகரின் வளர்ந்து வரும் AI ecosystem-க்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மேலும், Silicon Valley-க்கு வெளியேயும் உலகளாவிய அளவில் போட்டியிடக்கூடிய AI நிறுவனங்களை உருவாக்க முடியும் என்பதை Toronto நிரூபித்து வருகிறது.
கனடா அரசும் AI துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. AI ஆராய்ச்சி, கல்வி, computing infrastructure மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் Toronto-வின் AI ecosystem எதிர்காலத்தில் மேலும் விரிவடையும் வாய்ப்பு உள்ளது.
ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மையங்கள் சில நகரங்களில் மட்டுமே இருந்த நிலையில், AI வளர்ச்சியால் புதிய நகரங்களும் உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், Toronto தற்போது AI ஆராய்ச்சி, startups, முதலீடுகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் முக்கிய சந்திப்பாக உருவெடுத்துள்ளது.

