தகவல்கள்

போதுமான தூக்கம் இல்லையா? உடலுக்கு வரும் கடும் பாதிப்புகள்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் போதுமான தூக்கமின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தினமும் குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது உடலுக்கும் மனதுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தூக்க நேரம் குறைந்தால் முதலில் சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து தூக்கம் குறைவதால் நினைவாற்றல் பாதிப்பு, வேலை திறன் குறைவு மற்றும் கோபம் அதிகரிக்கும் நிலையும் உருவாகலாம்.

மேலும், உடல் எடை அதிகரிப்பு, diabetes, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகளுக்கும் தூக்கமின்மை காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் mobile phone அதிகமாக பயன்படுத்துவது தூக்கத்தை பாதிக்கிறது.

மருத்துவர்கள் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை நல்ல தூக்கம் அவசியம் என்று பரிந்துரைக்கின்றனர். சரியான தூக்கம் உடலின் சக்தியை மீட்டெடுப்பதோடு மனநலத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்