பலரும் உடல் ஆரோக்கியத்திற்காக Green Tea குடிக்கிறார்கள். ஆனால், அதைச் சரியான முறையில் குடிக்கத் தவறினால், பலனைத் தராது. Green Tea குடிப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.
சாப்பிட்ட உடனே Green Tea குடிப்பது, உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். இதனால் இரத்த சோகை (Anemia) ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் கழித்தே Green Tea குடிக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் Green Tea குடிப்பது வயிற்று அமிலத்தன்மையை (Acidity) அதிகரிக்கும். இது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். ஏதாவது சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு குடிப்பதே பாதுகாப்பானது.
ஒரு நாளைக்கு 5-6 முறை Green Tea குடிப்பது தவறு. உங்கள் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, தூக்கமின்மை மற்றும் படபடப்பை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கோப்பைகள் மட்டுமே போதுமானது.
மாத்திரைகளை விழுங்கும் அதே நேரத்தில் Green Tea குடிப்பதைத் தவிர்க்கவும். இதில் உள்ள வேதிப்பொருட்கள் சில மருந்துகளின் வீரியத்தைக் குறைக்கலாம். மாத்திரை எடுப்பதற்கும், Green Tea குடிப்பதற்கும் இடையே கால இடைவெளி இருப்பது அவசியம்.
ஒருமுறை பயன்படுத்திய Green Tea பேக்கை மீண்டும் பயன்படுத்துவது சுகாதாரமற்றது. அதில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. மேலும், இரண்டாவது முறை பயன்படுத்தும்போது அதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இருக்காது, சுவையும் கசப்பாகவே இருக்கும்.
Green Tea-வை கொதிக்கும் நீரில் நேரடியாகப் போட்டுப் பருகக்கூடாது. அதன் சுவை கசப்பாக மாறி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழிந்துவிடும். நீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்த பிறகு, சிறிது நேரம் ஆறவிட்டு, மிதமான சூட்டில் Green Tea தயாரிப்பதே சிறந்தது.
Green Tea உங்கள் உடலுக்கு நன்மைகளைத் தர வேண்டுமானால், அதைச் சரியான முறையில், சரியான நேரத்தில் குடிப்பதே சிறந்த வழி!

