செய்தி

ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் என கூறப்படும் மிதிகம ருவான் எனப்படும் ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பூஸா சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானிடமிருந்து ஒக்டோபர் 13 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதவான் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கினார்.

சட்டவிரோதமாக ஹெரோயின் இறக்குமதி மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மிதிகம ருவானிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மன்றில் சுட்டிக்காட்டியிருந்த்து.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.