செய்தி

ரஷ்யா- உக்ரைன் தாக்குதல்; ஏற்பட இருந்த சேதம்

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் பலர் இந்த போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது. போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

ஆண்டுக்கு 1.7 கோடி டன் அளவில் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடும் இந்த ஆலையை குறிவைத்து டிரோன்களை ஏவியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை ரஷ்யா வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானிலேயே இடைமறித்து தகர்த்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.