செய்தி

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ள மைத்திரி!

கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் சில தினங்களில் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி விடுவதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதம் நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுர அரசாங்கம் உங்களைப் பழிவாங்கியதா என மைத்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீட்டுவசதி மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வசதிகளை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் சட்டத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. புதிய அரசாங்கம் சட்டத்தை இரத்து செய்த நிலையில் நாங்கள் வெளியேறுகின்றோம். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.