செய்தி

யாழ் கச்சதீவில் கால் பதித்த இலங்கை ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்துறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார்.

குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார்.

மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.