செய்தி

இலங்கை பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி

இலங்கையின் இரண்டாம் நிலை சிகிச்சை பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தவும், நோய் தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் 106.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தொகுப்பை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இன்று (01.08.2025) அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும்; தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிக்கு நிதியத்திடமிருந்து 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் அடங்கும்.

இந்தத் திட்டம் வைத்தியசாலை மேம்பாட்டை ஆதரிக்கும்,

விசேட சிகிச்சைக்கான அணுகலை விரிவுபடுத்தும் மற்றும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆய்வகங்களை மேம்படுத்துதல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுதல் மூலம் சுகாதார அமைப்பின் மீள்தன்மையை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.