செய்தி

மூன்று பிள்ளைகளின் தாயார் கொடூரமாக கொலை

அநுராதபுரம் – ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், அநுராதபுரம் அங்கமுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. கொலை குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண் தனது கணவருடனான குடும்ப தகராறு காரணமாக சுமார் 8 மாதங்களாக தனது தாயார் வீட்டில் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

அதே நேரத்தில் கணவர் தனது இளைய மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், கணவர் மூத்த மகனை ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தாயார் வீட்டின் முன் குறித்த பெண் அடையாளம் தெரியாத நபரொருவரினால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.