செய்தி

பாடசாலை மாணவனின் உயிரை பறித்த விபத்து!

பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யங்கல்மோதர – நாரம்மல வீதியில் உள்ள நைனாதெனிய சந்திக்கு அருகில், யங்கல்மோதரவிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் யடிகலோலுவவைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் குருநாகல் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.