செய்தி

நாட்டில் புதிய கடன் அட்டை பாவனை அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 12,325 புதிய கடன் அட்டைகள் பாவனைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூன் மாத இறுதியில் 20 இலட்சத்து 75 ஆயிரத்து 744 கடன் அட்டைகள் பாவனையில் இருந்ததுடன், அந்த எண்ணிக்கை ஜூலை மாத இறுதிக்குள் 20 இலட்சத்து 88 ஆயிரத்து 69 ஆக பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாதத்தில் 0.59 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

இதேவேளை இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கடன் அட்டைகளின் எண்ணிக்கை 3.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.