செய்தி

தாய்வானை தாக்கிய ரகசா சூறாவளி; 14 பேர் பலி

தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா  சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள தடுப்பு வாவியில் நீர் நிரம்பி வழிந்து நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததில் 124 பேரைக் காணவில்லை என தீயணைப்புத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் தாய்வானை தாக்கிய சூறாவளி தற்போது சீனாவின் தெற்கு கடற்கரையையும் ஆசிய நிதி மையமான ஹொங்கொங்கையும் தாக்கியுள்ளது.

கிழக்கு பகுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவுகளால் உருவான தடுப்பு வாவி நேற்று பிற்பகல் அதன் கரைகளை உடைத்து குவாங்டாங் நகருக்குள் வெள்ளம் நீர் வடிந்தோடியுள்ளது.

சுனாமி போன்று வெள்ளம் நீர் தாக்கியது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.