செய்தி

கந்தளாய் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (23) கைதாகியுள்ளார்.  

வெவசிறிகம பகுதியைச் சேர்ந்த 40 வயது கந்தே கெதர சமிந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சின்னக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியும், ஒரு தோட்டாவுமே கைப்பற்றப்பட்டுள்ளது.  

குறித்த நபர் இந்த துப்பாக்கியை மான் வேட்டைக்குப் பயன்படுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.