செய்தி

ஜப்பான் உதவியில் மின்மாற்ற மார்க்கம் திறப்பு

ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஹபரணை – வெயங்கொட மின்மாற்ற மார்க்கத்தை இலங்கை திறந்து வைத்துள்ளது.

இந்தத் திட்டம் நாட்டின் கடன் நெருக்கடியால் தாமதமாகியிருந்தது.

கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிதியுதவி மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து முடிக்கப்பட்ட முதல் யென்-கடன் திட்டம் இதுவாகும் என்று ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா பாராட்டியுள்ளார்.

அதிக திறன் கொண்ட மின்மாற்ற மார்க்கம் மின்மாற்ற இழப்பு மற்றும் காபன் உமிழ்வைக் குறைப்பதோடு மின் நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும்.

சமீபத்திய மின் விநியோகத் தோல்விகளைத் தடுக்க இது உதவும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியுள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.