செய்தி

கந்தளாய் பகுதியில் இடம் பெற்ற விபத்து

கந்தளாய் – பேராறு பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு (01) இடம்பெற்றுள்ளது. 

காயமடைந்தவர்கள் உடனடியாக கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார்சைக்கிள் வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி வந்துள்ளது. 

இதன்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.