செய்தி

இஸ்ரேல் – காசா தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர்.

மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 64 ஆயிரத்து 700 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சூழலில் இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கடைசி கோட்டையாக உள்ள காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் அங்குள்ள ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இதில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.