ஐ.நா. கல்வி அறிவியல் கலாசார நிறுவனம்( யுனெஸ்கோ)
எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி ஈரானின் தலைநகரான டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு ஒன்றை நடத்தியது.
இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது.

எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ஆம் திகதியை “சர்வதேச எழுத்தறிவு தினம்” என யுனெஸ்கோவின் 14 ஆவது பொதுக்குழு பிரகடனம் செய்தது.
1967 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

