செய்தி

மட்டு நகரில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் மாலை இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது போரதீவுப்பற்று பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70வயதான தங்கராசா – சுந்தரராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு தற்காலிக மின்சார இணைப்பை பெற முற்பட்டபோது மின்சாரம் தாக்கியவரை, அயலவர்களின் உதவியுடன் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்.

பழுகாமம் பிரதேசவைத்தியசாலைக்கு வரும்போது இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.