செய்தி

மட்டக்களப்பு ஏறாவூரில் விபத்து!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி சாரதியும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்தனர்.

மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் தன்னாமுனை தேவாலய குறுக்கு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடும் சேதமடைந்ததுடன் அதனை செலுத்திவந்த இருவரும் காயமடைந்தனர்.

ஸ்தலத்திற்கு வருகைதந்த ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.