செய்தி

காட்டு யானை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலை 6.00 மணியளவில் சிறுமி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை என்பதால், சிறுமி தனது தந்தையுடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காட்டு யானை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.