செய்தி

இடிந்து விழுந்த மிகப்பெரிய செப்புச் சுரங்கம்

சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சில அதிர்வு காரணமாக இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.குறித்த சம்பவத்தின் போது 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் தொழிலாளர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.