இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று நுவரெலியா உடப்புஸ்சல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா நகரத்திற்கு செல்லும் போது அதிகளவான புகையுடன் வீதியில் பயணித்துள்ளது.
இதனால் பேருந்தின் பின்னால் வரும் வாகனங்களுக்கு மிகுந்த இடையூறும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறான அரச பேருந்துகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இவ்வாறான நடவடிக்கையில் ஒரு தனியாரோ அல்லது அரசிற்கு சொந்தம் அல்லாத பிற வாகனங்கள் சென்றிருந்தால் அதன் நிலைமை என்ன? கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

