தகவல்கள்

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை;

  • July 10, 2025
  • 0 Comments

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த புகழ் பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர் அலி; அவருக்கு வயது 32; கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தநிலையில், வீட்டின் உரிமையாளர் அங்கு சென்றுபார்த்தபோது அவர் இறந்தநிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று பொலிஸார் […]

செய்தி

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் விஜயம்

  • July 10, 2025
  • 0 Comments

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நேற்று (9) மாலை திடீர் விஜயம் மேற்கொண்டார். வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியசாலையின் மருந்துப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன் […]

செய்தி

அழகு சாதன பொருள் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையின் போது, ​​வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 35 பிராண்டுகளைச் சேர்ந்த கிறீம்கள் உட்பட 4079 வாசனை திரவிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையின் போது, […]

செய்தி

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

  • July 10, 2025
  • 0 Comments

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மா பாக்கெட்டின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.400g பொதியொன்று 100 ரூபாவாலும், 1Kg பால்மா பொதியொன்று 250 ரூபாவாலும் விலை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

தகவல்கள்

விண்வெளியில் விவசாயத்தை தொடங்கிய சுக்லா

  • July 10, 2025
  • 0 Comments

 அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் சுபான்ஷ் சுக்லா உட்பட நால்வர் ஜுன் மாதம் 26 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக்கட்டத்தில், அங்கு வெந்தயம், பச்சை பயிறு போன்ற தானியங்களை வளர்த்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாத்திரங்களில் விளைந்திருக்கும் பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளின் புகைப்படங்களை எடுத்து அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

தகவல்கள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டியது பிட்காயின்

  • July 10, 2025
  • 0 Comments

 வரலாறு காணாத வகையில் பிட்காயின் மதிப்பு நேற்று (9) உயர்ந்து புதிய சாதனையை எட்டியது. கிட்டத்தட்ட $112,000 என்ற குறியீட்டை தொட்டது. தேவை அதிகரிப்பு மற்றும் சந்தையில் உள்ள ஆர்வம் ஆகியவை கிரிப்டோகரன்சி சந்தையில் தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருவதாக கூறப்படுகிறது. உலகின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமான பிட்காயின், நேற்று புதிய உச்சமாக $111,988.90 ஐ தொட்டது. கடைசியாக 0.4% உயர்ந்து $111,259 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பிட்காயின் 18% […]

மருத்துவம்

சின்ன வெங்காயத்தின் நன்மை குணங்கள்;

  • July 9, 2025
  • 0 Comments

சின்ன வெங்காயம் உடல் சூட்டை தணிக்கும் திறன் கொண்டது. இதனை சூடான காலநிலையிலும், காய்கரு மாறுதல்களை சமாளிக்கவும் பயன்படுத்துகின்றனர்.  சின்ன வெங்காயம் நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளி, சிரமங்களை குறைத்து, சளி பிரச்சினைகளில் நிவாரணம் அளிக்கிறது. வெங்காயத்தில் உள்ள காந்தம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கும் தன்மைகளை கொண்டுள்ளன.  சின்ன வெங்காயம் கொழுப்பு அமிலங்களை குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உடலைத் தழுவி பாதுகாக்கின்றன. சல்பர் […]

மருத்துவம்

உடல் இளமையை பேணும் மருந்து கண்டுபிடிப்பு!

  • July 9, 2025
  • 0 Comments

முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழலில் பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பன்றி இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையை […]

செய்தி

இலங்கையில் அதியுச்சம் தொடும் வாகன விலை!

  • July 9, 2025
  • 0 Comments

இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை திறந்துள்ளன. இறக்குமதியை மீள ஆரம்பிப்பதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப ஒதுக்கீடாகப் […]