செய்தி

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா பாக்கெட்டின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.400g பொதியொன்று 100 ரூபாவாலும், 1Kg பால்மா பொதியொன்று 250 ரூபாவாலும் விலை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.