இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
உத்திர பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கம் காரணமாக இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, பெற்றோர் சந்தைக்கு சென்றிருந்ததால், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதனை சிறுவனிடம் தெரிவித்து, தன்னை சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார். அதன்படி, சிறுவன்,சிறுமியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். தனது இன்ஸ்டகிராம் நண்பனை நேரில் சந்திக்கபோகும் ஆவலில் சிறுமி உற்சாகமாக கதவை திறந்திருக்கிறார்.
ஆனால், சிறுவனுடன் மேலும் மூன்று சிறுவர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியை,வீட்டின் உள்ளே தள்ளிய நான்கு சிறுவர்களும் வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர்,இடம்பெற்ற விபரீதத்தை உணர்ந்து சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டிவிட்டு,பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனால், பொலிஸார் வருவதற்குள் சிலர், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடியிருப்பின் பெயர் கெட்டுவிடும் என்று கருதி, வீட்டின் கதவைத் திறந்து நான்கு சிறுவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து,பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் பேரில்,பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு வந்த நான்கு சிறுவர்களில் மூவர்,9, 10, மற்றும் 11-ஆம் வகுப்புகளில் படித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை பொலிஸார், இரு சிறுவர்களை கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

