விளையாட்டு

மின்னல் தாக்கியதால் மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான கால்பந்து வீரர் சோஃப்வான் அவாய் (Sofwan Awae) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 12 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையிலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென மின்னல் மைதானத்தை தாக்கியது. இதில் வீரர் சோஃப்வான் அவாய் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட […]

விளையாட்டு

நெய்மரின் ஓய்வு அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்

  • July 30, 2026
  • 0 Comments

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி நட்சத்திரமாகவும், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழும் நெய்மர், சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான காயங்கள் காரணமாக நெய்மர் முழுமையான உடல்தகுதியுடன் களமிறங்க முடியாமல் சிரமங்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை அவர் பரிசீலித்து […]

விளையாட்டு

அர்ஜென்டினா தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடும் மெஸ்ஸி

  • July 28, 2026
  • 0 Comments

உலக கால்பந்து அரங்கில் ஜாம்பவானாகத் திகழும் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று பரவலாகப் பேசப்பட்ட வதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்றும், வரவிருக்கும் முக்கிய போட்டிகளிலும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்றும் பெரிதும் […]

விளையாட்டு

தோல்வியால் மனமுடைந்த இங்கிலாந்து கேப்டன்

  • July 18, 2026
  • 0 Comments

உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய போட்டிக்குப் பிறகு, இங்கிலாந்து அணியின் கேப்டன் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலக்கை எட்ட முடியாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன், இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது. எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம் என்ற உணர்வு இருக்கிறது. இருப்பினும், கடைசி வரை முழு முயற்சியையும் வெளிப்படுத்தினோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தோல்வியில் இருந்து […]

விளையாட்டு

FIFA 2026 – மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

  • July 10, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கைலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பலே தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். எம்பாப்பே முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், 60-வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, 66-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பலே இரண்டாவது […]