ஈரமான நெல் கொள்முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என சந்தைப்படுத்தல் சபை வெளியிட்டுள்ளது. இதுவரை 20,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் பழங்குடி ஒன்றை சேர்ந்த 19 மாதங்களே ஆன குழந்தை பெரியவர்களுடன் இணைந்து "குவாருப்" எனும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் 7நாள் சடங்கில் பங்கேற்றார்.
இலங்கயில் தற்போதைக்கு 16% குடும்பங்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் அமர்வுகளில் கருத்து சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.