செய்தி

அவுஸ்திரேலியாவில் அதிகாலை நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் (Australia) கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில அதிர்வு தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க பசுபிக் பெருங்கடலில் பாரிய அளவிலான சுனாமி பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளுக்குள் எட்டு மெக்னிடியூட் அல்லது அதற்கு அதிக அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட 15 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 1000 அடி வரை உயர்வான சுனாமி பேரலை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் பாரிய அழிவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.