மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈராக் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு பெற்ற குழுவினர் நடத்திய இந்தத் தாக்குதல், எதிர்பாராதவிதமாக அமெரிக்க வீரர்களின் முகாமையும் பாதித்துள்ளது. இதில் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்திருப்பது, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் அபாயம் அதிகரித்துள்ளதாகக் கருதும் உலக நாடுகள், அமைதி காக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை மற்றும் ஈரான் அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன

