அண்மைக்காலமாக இணையவழிக் கொள்ளைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. உங்கள் பையில் இருக்கும் அந்தத் திறன்பேசி (Smart Phone), உங்களுக்கே தெரியாமல் உங்கள் பணத்தைக் காலி செய்யும் ஒரு ஆயுதமாக மாறி வருகிறதா?
உண்மையாகவே என்னதான் நடக்கிறது?
இந்த இணையவழிக் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதுப்புது உத்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
- வங்கி மேலாளர் வேடம்: “நான் உங்கள் வங்கியில் இருந்து பேசுகிறேன்… உங்கள் கணக்கு முடக்கப்படப் போகிறது” என்று அதிகாரத் தோரணையில் பேசி உங்களைப் பயமுறுத்துவது.
- அதிர்ஷ்டலாப ஆசை வார்த்தைகள்: “உங்களுக்குப் பல இலட்சம் அதிர்ஷ்டலாபம் விழுந்திருக்கிறது” என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் இருக்கும் ‘இணைப்பை’ (Link) அழுத்த வைப்பது.
- பகுதிநேர வேலை மோசடி: “வீட்டிலிருந்தபடியே கைத்தொலைபேசி மூலமாகத் தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம்” என்று ஆசை காட்டி, பணத்தை முதலீடு செய்ய வைத்து மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடுவது.

