சோதிடம்

மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்-அதிர்ஷ்டம் அடிக்க போகும் 4 ராசிகள்

 தற்போது மகர ராசியில் சூரியனும் சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். இவர்களுடன் செவ்வாய் பகவானும் இணைகிறார். இதனால் மகர ராசியில் திரி கிரக யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய யோகமாக பார்க்கப்படுகிறது.

மேலும், செவ்வாய் பகவான் தன்னுடைய உச்ச ராசியில் இருப்பதால் இரட்டை ராஜயோகமும் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்தக் காலகட்டங்களில் மனரீதியான அழுத்தம் குறையும். அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். உங்களுக்கு பணி இடங்களில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் உருவாகும்.

கடகம்

கடக ராசியினருக்கு அவர்களுடைய ஏழாவது வீட்டில் இந்த இரட்டை ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எல்லாம் கைகூடிவரும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியினருக்கு ஐந்தாவது வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகிறது. இதனால் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தைகள் வழியாக புகழ் அடைவீர்கள். உங்களுடைய கலைத் திறன் மிகச் சிறப்பாக வெளிப்படும். காதல் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மகரம்

மகர ராசியினருக்கு முதல் வீட்டில் இரட்டை ராஜயோகம் உருவாகிறது. இதனால் இவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த தன்னம்பிக்கையும் தைரியமும் எதையும் எதிர்த்து போராடக்கூடிய நம்பிக்கையும் பிறக்கும். வழக்குகள் எல்லாம் சாதகமாக அமையும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். முக்கிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். 

You may also like

'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்
சோதிடம்

‘விசுவாவசு’ வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்

வருடப்பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு ‘விசுவாவசு’ புதுவருடம் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 3.21 மணிக்கு ‘விசுவாவசு’புதுவருடம் பிறக்கின்றது. விஷு
சோதிடம்

புத்தாண்டு ராசிபலன் 2025

மேஷம் இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சி,ராகு / கேது பெயர்ச்சி உண்டாவதால் உங்களின் செயலிலும் பேச்சிலும் திறமை அதிகரிக்கும். பல்வேறு சோதனைகளிலிருந்து இனி விடுபடும்