சோதிடம்

இவர்கள் தான் வருங்கால கோடீஸ்வரர்களாம்

ஜோதிடத்தில் எண் கணிதமும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக எண் கணிதம் வாயிலாக நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை, படிப்பு, தொழில், திருமணம் என்று எல்லாவற்றையும் கணித்துவிட முடியும்.

அந்த வகையில் எண் கணிதத்தில் ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் அவர்களுடைய எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராக மாறக்கூடிய யோகத்தை பெற்று இருப்பார்களாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

எந்த ஒரு மாதத்திலும் 3,12, 21,30 ஆகிய திகதிகளில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆளுமைப் பண்பு இருக்கும். இவர்களுடைய எண்ணை ஆளக்கூடிய கிரகமாக வியாழ பகவான் இருக்கிறார். இவர்களுக்கு இயல்பாகவே ஞானம் அதிகம் இருக்கும்.அதேபோல், நன்றாக படித்து சமுதாயத்தில் ஒரு பெரிய இடத்தில் அமர்ந்து விடுவார்கள். மேலும், இவர்கள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் இவர்களே சிறந்து விளங்கக்கூடிய அளவிற்கு இவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் இருக்கும்.

எந்த ஒரு மாதத்திலும் 7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும் மிகச் சிறந்த புத்திக் கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணின்அதிபதி கேது பகவான் ஆவார். ஆதலால் இவர்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து செயல்படக்கூடிய பக்குவம் இயல்பாகவே இருக்கும்.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் இவர்கள் அதிகமான ஞானத்தை பெற்றிருப்பார்கள். படிப்பிலும் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்களாகவும் படிப்பால் தன்னுடைய வாழ்க்கையை உயர்த்தக் கூடிய மிகப்பெரிய அளவிலான ஒரு வாய்ப்புகளையும் பெறுகிறார்கள்.

You may also like

'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்
சோதிடம்

‘விசுவாவசு’ வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்

வருடப்பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு ‘விசுவாவசு’ புதுவருடம் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 3.21 மணிக்கு ‘விசுவாவசு’புதுவருடம் பிறக்கின்றது. விஷு
சோதிடம்

புத்தாண்டு ராசிபலன் 2025

மேஷம் இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சி,ராகு / கேது பெயர்ச்சி உண்டாவதால் உங்களின் செயலிலும் பேச்சிலும் திறமை அதிகரிக்கும். பல்வேறு சோதனைகளிலிருந்து இனி விடுபடும்