தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115 அங்குல (Inch) மாதிரிகள்(models) அறிமுகமாகின்றன. இதன் மூலம், சிறிய வீடுகள் முதல் பெரிய மண்டபங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் ஏற்ற வகையில் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.

சிறப்பு அம்சங்கள்

Micro RGB Technology 

100 மைக்ரோமீட்டருக்கு குறைவான Red, Green, Blue LED-கள் தனித்தனியாக ஒளியை உமிழ்வதால், மிகத் துல்லியமான நிறக் கட்டுப்பாடு மற்றும் இயல்பான நிறத் தரத்தை வழங்குகிறது.

AI Processing

4K AI Upscaling Pro, AI Motion Enhancer Pro ஆகியவை நேரடியாக பிரகாசம், இயக்கம், தெளிவை மேம்படுத்துகின்றன.

Micro RGB AI Engine Pro

 அடுத்த தலைமுறை AI சிப் மூலம் ஒவ்வொரு ஃப்ரேமையும் துல்லியமாக செயலாக்கி, உண்மையான காட்சியை உருவாக்குகிறது.

Color Booster & HDR Pro

BT.2020 wide color gamut-இல் 100 சதவீத நிறத் துல்லியத்தை வழங்குகிறது.

Glare Free Technology 

ஒளி பிரதிபலிப்பை குறைத்து, எந்த சூழலிலும் தெளிவான காட்சியை வழங்குகிறது.

Vision AI Companion

Bixby அடிப்படையிலான LLM-சார்ந்த AI, conversational search, live translate, generative wallpaper போன்ற வசதிகளை வழங்குகிறது.

Audio

Dolby Atmos, Adaptive Sound Pro, Q-Symphony, புதிய Eclipsa Audio மூலம் 3D ஒலி அனுபவம் கிடைக்கும்.

Samsung தனது பிரீமியம் Micro RGB TVனை,எதிர்வரும் ஜனவரி லாஸ் வேகாஸில் இடம் பெறும் ‘CES 2026’ நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது.

You may also like

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில்
தொழில்நுட்பம்

AI உடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி உறுதி!

இன்றைய வேகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், சாதாரண வளர்ச்சியைத் தாண்டி 100 மடங்கு வளர்ச்சியை அடைய வேண்டுமானால், நம்முடைய சிந்தனை முறையிலும் வேலை