இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 294 ரூபாயாகும்.சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 318 ரூபாயாகும்
அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 355 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 180 ரூபாயாகவும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

