செய்தி

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார்.

பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார்.

இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும் தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும் ஆரோக்கியமான குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.