செய்தி

மினுவாங்கொடையில் கொடூரமான முறையில் பெண் கொலை

கம்பஹா – மினுவாங்கொடையில் வீட்டில் இருந்த 71 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவலின்படி, இது ஒரு கொடூரமான மற்றும் மோசமான குற்றம் என்று விபரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வந்த இந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய மினுவாங்கொடை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.