மருத்துவம்

பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? 

நமது பாதங்கள் நமது முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. மேலும், சிறிய அன்றாட வேலைகளுக்கும் கூட பாதங்களின் சீரான தொழிற்பாடு மிகவும் அவசியமானது.எனவேதான் பாதங்கள் அழகாகவும் ஆரோக்கியமானவும் இருக்க வேண்டியது அவசியம்.

பாதங்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்வது பித்த வெடிப்பு.பித்த வெடிப்புகளை போக்கி வெறும் ஏழு நாட்களிலேயே மென்மையாக அழகிய பாதங்களை பெற வீட்டிலேயே செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

வாழைப்பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்

ஒரு பழுத்த வாழைப்பழம் மற்றும் அவகேடோவை ஒன்றாக மசித்து, அந்தக் கலவையை வெடிப்புக்கள் உள்ள பாதங்களில் நன்றாக தடவி விட்டு  15-20 நிமிடங்கள் அப்படியே நன்றாக உலரவிட வேண்டும். இந்த கலவையில் காணப்படும் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குவதற்கு பெரிதும் துணைபுரியும். இதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பயன்படுத்தினாலே போதும் பித்த வெடிப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள்

வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் நன்றாக குழைத்து அந்த கலவையை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

தேங்காய் எண்ணெய்

இரவு படுக்கைக்கு செல்லும்  முன்னர் காலை நன்றாகத் தேய்த்து கழுவிவிட்டு சிறிது தேங்காய் எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் தூக்கத்தின் தரம் மேம்படுவதுடன் விரைவில் பித்த வெடிப்புகளும் மறைய ஆரம்பிக்கும். வெடிப்பு இல்லாதவர்களும் இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல்  தடுக்கலாம்.

விளக்கெண்ணெய்

குளித்து முடித்த பின்னர் பாதங்களை ஈரமில்லாதவாறு ஒரு பருத்தித்  துணியால் துடைத்துவிட்டு, பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம். மேலும், கடுமையான பித்த வெடிப்பால் பாதிக்கப்பட்ட பாதங்கள் கூட அதனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையாகவும் அழகாகவும் மாறும்.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்