செய்தி

பிரித்தானியாவில் வேலை பெறுதல் தொடர்பில் புதிய சட்டம்

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக கூறிவரும் அதேவேளை, உண்மையில், சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்கள் மீது தொடர்ந்தும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது .

அவ்வகையில், பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப் புலமை இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாத வகையில் சட்டம் ஒன்று, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஆம், இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும். சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர், பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்த புதிய விதி, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எட்டாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.