செய்தி

மடகஸ்காரில் கவிழ்ந்தது ஆட்சி நாட்டைவிட்டு ஜனாதிபதி ஓட்டம்

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் இளம் தலைமுறையினர் நடத்திய ‘ஜென் இசட்’ எனப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த ராணுவம் மறுத்ததால், அந்நாட்டு ஜனாதிபதி ரஜோலினா தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜென் இசட் தலைமுறையினர் தங்களது போராட்டத்தை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர். 

இதில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 

இதற்கிடையே இளைஞர்களின் போராட்டத்துக்கு இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். 

இதனால் இராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி உள்ளார். இராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறும்போது, என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என்றார். 

அவர் தனது உரையில், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லவில்லை. 

எனினும் நாட்டை விட்டு அவர் வௌியேறியுள்ளதால் அவரை பதவியில் விலக்குவதற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதனை அடுத்து மடகஸ்காரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 

இந்த அறிவிப்பை வெளியிட்ட இராணுவ கேர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைக்க பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.