செய்தி

நாட்டு மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது

நாட்டு மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்பொழுது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பங்கேற்ற போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக மக்கள் புத்தகங்களை கொள்வனவு செய்யக்கூடிய இயலுமை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சியை முன்னெடுத்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் அறிவார்ந்த இளைய சமூகமென்று இணைந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

வாசிக்கும் மற்றும் கற்றுக் கொள்ளும் தரப்பினர் சமூகத்தில் இணைந்து கொள்வது ஒரு நல்ல முன்னேற்றம் என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.