செய்தி

குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் பக்டீரியா; மக்களுக்கு எச்சரிக்கை

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் (Syphilis) போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குரங்குகளிடையே மேற்கொள்ளப்பட்ட இரத்தம் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் இந்த தொற்றுநோய் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குரங்குகளின் பிறப்புறுப்பு, தோல் மற்றும் ஆசனவாய் போன்ற உறுப்புக்களிலிருந்து இந்த தொற்று பரவக்கூடும்.

குரங்குகள் அசுத்தமான பகுதிகளில் இருப்பதன் காரணமாக இந்த தொற்று (Syphilis) நோய் அதிகமாக பரவக்கூடும்.

முக்கியமாக, குரங்குகள் அதிகமாக நடமாடக்கூடிய மத வழிபாட்டுத் தலங்களில் இந்த பக்டீரியாக்கள் (Syphilis) குரங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.

மனிதர்களுக்கு இந்தத் தொற்று (Syphilis) பரவாமல் இருக்க, குரங்குகளை நெருங்குவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.