செய்தி

கிண்ணியா கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின்

கிண்ணியா பெரியாற்றுமுனை கடலில் டொல்பின் வகை மீன்  கரை ஒதுங்கிய நிலையில், அப்பிரதேச மக்கள் அதை கடலுக்குள் விடுவதற்கு முயற்சித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட காலநிலை மாற்றங்களினால் டொல்பின் மீன் கரைக்கு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரையொதுங்கிய டொல்பின் மீனை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு அப்பிரதேச மக்கள் முயற்சித்து வருகின்றனர். 

டொல்பின் மீன் கரையொதுங்குவது அரிதிலும் அரிதான ஒரு விடயமாகும். டொல்பின் கடலுக்குள் இருந்து கரையொதுங்குவதைப் பார்க்க பலரும் விரும்புவது வழக்கம். 

குறிப்பாக சிறுவர்கள் டொல்பின் மீனைப் பார்க்க அதிகளவில் விரும்புவர். ஏனெனில் டொல்பின் நீருக்குள் அழகாக துள்ளிப் பாய்ந்து விளையாடும். இந்தக் காட்சியைப் பார்க்கவே சிறுவர்கள் உள்ளிட்டோர் விரும்புவர்.

இவ்வாறானதொரு நிலையில் இன்று கிண்ணியா பெரியாற்றுமுனை கடற்கரையில் டொல்பின் வகை மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

கரையொதுங்கிய டொல்பின் மீனைப் பிடித்த இளைஞர்கள், அதை மீண்டும் கடலுக்குள் விட முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.